குறைந்த வருமானம் கொண்டவர்களின் மின்சார கட்டணத்திற்கு சலுகை வழங்க தீர்மானம்!

0
165

திருத்தப்பட்ட பாதீட்டில், குறைந்த வருமானம் கொண்டவர்களின், மின்சார கட்டணத்திற்கு சலுகை வழங்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடப்படுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில், நிலையியல் கட்டளையின் கீழ், கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மின்கட்டண உயர்வானது, பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளமையால், அவர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சலுகை கிடைக்கப்பெறாத தரப்பினருக்கும், சலுகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை, திருத்தப்பட்ட பாதீட்டில் உள்ளீர்க்க கலந்துரையாடப்படுவதாக குறிப்பிட்டார்.