ஜோர்ஜியாவிலிருந்து 29 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு!

0
195

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பின்னர் ஜோர்ஜியாவில் இருந்து 29 பேர் அடங்கிய முதலாவது சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த குழுவினர் இன்று அதிகாலை 3.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கடந்த நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்திருந்த போதிலும் மீண்டும் அது வளர்ச்சியடைந்து வருகிறது.