இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கவேண்டும் – அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள்!

0
164

இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கவேண்டும் என அமெரிக்க காங்கிரஸின் பத்து உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை மக்களிற்கு உதவி தேவையாக உள்ள இந்த தருணத்தில் உடனடி மேலதிக உதவிகளை வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இலங்கைக்கு அவசர மேலதிக உதவிகளை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையை ஸ்திரப்படுத்துவதற்கான  ஆதரவு நடவடிக்கைகளை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் உள்வாங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைகளில் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை இலக்குகளை அடைவதற்காக  பொறுப்புக்கூறல்  நல்லிணக்கம் ஜனநாய ஸ்தாபனங்கள் தொடர்பான நீண்டகால விவகாரங்களிற்கும் தீர்வை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.