கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் மேலும் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த 31 பேரில் அறுவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3,553 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.