காலி மாவட்டம் பிட்டிகல பிரதேசத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி தந்தையால் மகன் அடித்துப் கொலை செய்யப்பட்டுள்ளார். 62 வயதுடைய தந்தை 40 வயதுடைய மகனை இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணி விவகாரம் தொடர்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பல நாட்களாக ஏற்பட்டு வந்த வாக்குவாதமே இந்தக் கொலைக்கான காரணம் என பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.