இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் உடன்பாடு

0
190

இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், 48 மாத வேலைத்திட்டத்துடன். இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிப்பதற்கான பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையையடுத்து, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்புஇ நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பது மற்றும் ஊழல் அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிக்கொணர்வது இந்த நிதித் திட்டத்தின் நோக்கங்களாகும்.