துமிந்தவின் மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!

0
158

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த ஜயவர்தன இன்று விலகியுள்ளார்.

பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கு விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதிபதி பிரியந்த ஜயவர்தன அறிவித்தார்.