இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி; கனடா தூதுவர் வெளியிட்டுள்ள தகவல்!

0
137

இலங்கைக்கும் சர்வதேச நாணயநிதியத்திற்கும் இடையில் கடனுதவி குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் வரவேற்றுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையை வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செழிப்பை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.