29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலக கடல் மட்டம் 10 அங்குலம் உயரும் அபாயம்!

கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால், உலக கடல் மட்டம் 10.6 அங்குலம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றங்களால், அந்தாட்டிக்கா, ஆர்க்டிக் போன்ற பனிப் பிரதேசங்களிலும் கூட வெப்பம் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக, பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதை ஆண்டுதோறும் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

ஆனால், ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட கடல் மட்டத்தின் அளவு 2 மடங்கு அதிகமாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள டென்மார்க், கிரீன்லாந்து புவியியல் ஆய்வு மற்றும் பனிப்பாறை நிபுணர் வில்லியம் கோல்கன் கூறுகையில், ‘கடல் மட்டம் வேகமாக உயர்வதற்கு, ஜாம்பி பனிக்கட்டி உருகும் வேகம் அதிகமாகி இருப்பதே காரணம். செயலற்று இருந்த இந்த பனிமலைகள், தற்போது வேகமாக உருகத் தொடங்கி உள்ளன. பருவ நிலை மாற்றமே இதற்கு காரணம்,’ என தெரிவித்துள்ளார்.
‘இயற்கை பருவநிலை மாற்றம்’ என்ற இதழில், உலகின் கடல் மட்டம் 30 அங்குலம் வரை உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles