கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தை நீடிக்க தீர்மானம்

0
149

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நேரத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும் பங்குத் தரகு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, 2022 செப்டம்பர் 15 வியாழன் முதல் இவ்வாறு வர்த்தக நேரம் நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 2 மணி நேரமாக இருந்த பங்குச் சந்தையின் வழக்கமான வர்த்தக நேரம், காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 2 1/2 மணி நேரமாக நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.