29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனை வலயத்தில் முதன்
முறையாக பாடசாலைத் தோட்டம்

பாடசாலைத் தோட்டங்களை நிர்மாணம் செய்தல் எனும், கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக கல்முனை வலயத்தில் முதன் முதலாக இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் தோட்டம் அமைக்கப்பட்டு அதன் அறுவடை விழா பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹூதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் பணிப்பாளர் சபீனா ஹசம்டீன் கௌரவ அதிதியாகவும் விசேட அதிதிகளாக பிரதித் கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.எம்.ஜாபிர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் அஸ்லம் சஜா, உதவிக் கல்விப் பணிப்பாளரும் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.அப்துல் மலிக், கல்முனை முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.எம். சம்சம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் செயற்றிட்ட உத்தியோகத்தர்களான நதீரா சாலி, லைலா உடையார், குமுது பேரேரா,மசினா இல்யாஸ் உட்பட மும்மதத் தலைவர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் எனப் பலரும், கலந்து கொண்டனர்.இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை முஸ்லிம் பெண்கள் ஆராய்சி செயல் முன்னணி மற்றும் டயகோனியா நிறுவனம் என்பன வழங்கியிருந்தன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles