ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்படவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக தற்போது பதவி வகிக்கும் ரங்கே பண்டார, வடமேல் மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதால், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வறிதாகியிருந்த நிலையில், அவ்விடத்திற்கு வஜிர அபேவர்த்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்குள் நுழைந்த வஜிர அபேவர்த்தனவிற்கு, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியைத் துறந்த நிலையில், தற்போது அந்த அமைச்சுப் பொறுப்பே வஜிர அபேவர்த்தனவிற்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.தே.க செயலாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!
0
189
Previous article