சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்வியை தொடர்கின்ற மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி வங்கி கிளைகள் ஊடாக தெரிவு செய்யப்பட சமுர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் 250 பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில்
சிப்தொற புலமைப்பரிசில் கல்விக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 90 இலட்சம் ரூபா நிதி இதன் போது பகிர்ந்தளிக்கப்பட்டது. மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ,மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன் ,பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்,சமுர்த்தி கணக்காளர் ,பஷீர் முகாமைத்துவ பணிப்பாளர் பிறைசூடி ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எ .சுதர்சன் ,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பராமலிங்கம் , சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் , பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி பயனாளிகளின் பாடசாலை மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்காக சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளின் சமுர்த்தி பயனாளிகளின் 2790 பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புக்காக 10 கோடியே 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.