தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை ஆறு ஆண்டுகளாக தாம் செய்கிறோம் எனக் கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் கணக்கை ஒழுங்காக படிக்கவில்லை போலிருக்கிறது என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.