திருகோணமலை அல்ஹீலூர் ஜீம்ஆ
பள்ளிவாசலில் சர்வ மத நிகழ்வு

0
154

பள்ளிவாசல் சுற்றுப்பயணம் மூலம் முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உறவு பாலங்களை உருவாக்குவதற்கான சர்வ மத நிகழ்வு இன்று திருகோணமலை அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள அல்ஹீலூர் ஜீம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

குறித்த சுற்றுப்பயணத்தில் உறவு ரீதியான வரவேற்பு, ஒழுங்கு படுத்தப்பட்ட பள்ளிவாசல் தரிசிப்பு, வணக்க வழிபாடுகளை நேரடியாக காண்பித்தல், இஸ்லாம் பற்றிய தப்பான அபிப்பிராயங்களை தெளிவுபடுத்தல், முஸ்லிம்களின் கட்டிடக்கலை வரலாறு, ஆன்மீக விழுமியங்கள் போன்றவற்றை அறிந்து கொள்தல், சுவரொட்டி கண்காட்சி என்பன இடம் பெற்றது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் மும்மத தலைவர்கள், அரச அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், பங்கேற்றதோடு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.