30 C
Colombo
Thursday, November 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு
நடவடிக்கைகள் முன்னெடுப்பு

களுவாஞ்சிகுடியில் வீடு வீடாக டெங்கு பரிசோதனை
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரகின்றன.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி பணிப்புரைக்கமைய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் வீடு வீடாகச் சென்று டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.

இன்று களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் தலைமையில் களுவாஞ்சிகுடி பிரதேச மெக்ஸ் விளையாட்டுக்கழம் மற்றும் வை.டி.எஸ்.சி விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பிரதேசத்திலுள்ள வீடுகளில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்ட்டன.

இதன் போது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காதோர், டெங்கு நுளம்பு பெருகும் வகையிலானவகையில் இடங்களை வைத்திருந்தோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் முன் எச்சரிக்கையும்விடுக்கப்ட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles