ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அந்தப் பதவிக்கு போட்டியிட கட்சித் தலைமையின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சிறுபான்மை வாக்கு அதிகம் உள்ளதால் அந்தப் பதவிக்கு போட்டியிட்டால், கட்சிக்கு அதிக பலம் கிடைக்கும் என அக்கட்சியில் பலர் தெரிவித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைக்காக முஜுபர் ரஹ்மான் தாக்கல் செய்த வேட்பு மனு வேட்பாளருடன் ஏற்பட்ட பிரச்சினையினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.