பளையில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீட்பு!

0
138

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அனுமதிபத்திரமின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் நேற்று விசேட பொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவமானது நேற்று மாலை பளை – செல்வப்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றுவதாக பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த பகுதியில் வைத்து டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.