பண்டிகை காலத்தை முன்னிட்டு 7 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.
லங்கா சதொச நிலையங்களில் இன்று முதல் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.
சிவப்பு பருப்பு கிலோ 11 ரூபாவினாலும் வெள்ளை சீனி கிலோ 6 ரூபாவினாலும் உருளைக்கிழங்கு 5 ரூபாவினாலும் செத்தல் மிளகாய் கிலோ 15 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் கிலோ 5 ரூபாவினாலும் டின் மீன் (425 கிராம்)கிலோ 15 ரூபாவினாலும் நெத்தலி கருவாடு 50 ரூபாவினாலும் குறைக்கப்பட்டதாக சதொச தெரிவிக்கிறது.
இதன்படி, சிவப்பு பருப்பு 374 ரூபாவுக்கும், வெள்ளை சீனி 218 ரூபாவுக்கும், உருளைக்கிழங்கு 285 ரூபாவுக்கும், செத்தல் மிளகாய் 1,780 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் 185 ரூபாவுக்கும், டின் மீன்கள் (425 கிராம்) 475 ரூபாவுக்கும், நெத்தலி கருவாடு கிலோ 1,100 ரூபாவுக்கும் பெற முடியும் என மேலும் குறிப்பிடுகிறது.