இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 619 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். 588 ஆண் கைதிகளும், 31 பெண் கைதிகளும் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை வெளியிடப் பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.