மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தலில்
தமிழர் மகா சபை சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கொக்கட்டிச்சோலை, முனைக்காட்டில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் மகா சபையின் தலைவர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன்,
முற்போக்கு தமிழர் அமைப்பின் செயலாளர் ரொஸ்மன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேசசபை உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும்
வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அரசியல் ஏஜன்ட் என, இராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, முனைக்காட்டில் தமிழர் மகா சபை சார்பில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஒற்றுமையை குழப்பி விட்டதாக தமிழர் மகா சபையின் தலைவர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.