சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் மீராக்கேணி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட
மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி சௌபாக்கியா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அமைத்துக் கொள்வதற்காக, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆறு லட்சத்தி ஜம்பதினாயிரம் ரூபாவை
நன்கொடையாக வழங்குகின்றது. மீதித்தொகையை சமுர்த்தி பயனாளி இடுவதன் மூலம் இவ்வீட்டினை நிர்மாணிக்க முடியும்.
இதனடிப்படையில் ஏறாவூர் மீராக்கேணியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிகாரா மஃவூத் தலைமையில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரா கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் எம்.எஸ்.பஸீர், ஏறாவூர் நகர் உதவிப்பிரதேச செயலாளர் அகமட் அப்ஹார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.கணேசமூர்த்தி உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.