கிழக்கிலங்கையி;ன் வரலாற்றுசிறப்புமிக்க மட்;டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மந்திரகல்ப்ப மஹா யாகம் சிறப்பான முறையில் நடைபெற்றுவருகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் நீங்கவும் மக்கள் நோய்நொடியின்றி மகிழ்ச்சியுடன் வாழவும் நாட்டில் ஸ்திரத்தன்னை ஏற்படவும் உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படாமல் மக்களை பாதுகாக்கவும்
வேண்டியே இந்த யாகம் நடாத்தப்படுகின்றது.
ஆலயத்தின் பிரதமகு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் கடந்த 13ஆம் திகதி தொடக்கம் இந்த மஹா யாகம் நடாத்தப்படுகின்றது.
மந்திரகல்ப மஹா யாகத்தினை முன்னிட்டு தினமும் ஆலயத்தில் மாமாங்கேஸ்வரருக்கு அபிசேகம் நடாத்தப்படுவதுடன் 108 சங்குகள் கொண்டு சங்காபிசேகமும் இடம்பெறுகிறது.
ஆலயத முன்றலில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள மஹா யாக குண்டத்தில் 108 மூலிகைகள் கொண்டு மந்திரகல்ப மஹா யாகம் இடம்பெற்று வருகிறது.
மக்கள் தங்கள் கைகளினால் யாகத்திற்குரிய பொருட்களை கொண்டுவந்து இந்த யாகத்தில் பங்குகொண்டு பயனடையும் வகையில் இந்த மஹா யாகம்
நடாத்தப்படுகின்றது.
தினமும் அதிகாலை 3.30மணி தொடக்கம் காலை 7.30மணி வரையும் யாக பூஜைகள் நடைபெறுவதுடன் மாலை 4.00மணி தொடக்கம் 7.30மணி வரையும் மந்திரகல்ப மஹா யாகம் நடாத்தப்படுகின்றது