சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை

0
179

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட செயலக மகளிர் அபிவிருத்தி பிரிவு குழுவினரால் இடம் பெற்ற நேர்முகத்தேர்வில் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஆலோசனைக்கு அமைய, மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தனின் வழிகாட்டலின் கீழ் ,மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி சந்திரசேகரனின் ஏற்பாட்டில் இடம் பெற்றது

.தேசிய மட்டத்தில் , சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நிகழ்வில், 14 பிரதேச செயலகங்களில் இருந்து தொழில் முயற்சியாளர்கள் 14 பேர் தெரிவு செய்யப்பட்டனர். தேசிய ரீதியில்மூவர் சிறந்த தொழில் முயற்சியாளராக தெரிவு செய்யப்பட்டு , அதிலிருந்து ஒருவருக்கு சிறந்த தொழில் முயற்சியாளர் விருது தேசிய மகளிர் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.