மட்டு.சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில், மாணவர் வரவேற்பு நிகழ்வு

0
212

2023 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு மட்டக்களப்பு சின்னவத்தை முத்தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தி.செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பட்டிருப்பு வலக்கல்வி அலுவலக கல்வி மேம்பாட்டு இணைப்பாளர் சோ.சிறிதரன், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இரண்டாம் தர மாணவர்கள் முதலாம் தர மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.மகிழ்ச்சியான பாடசாலையின் ஆரம்பம் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.