கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு, இன்று திடீர் விஜயம் மேற்கொண்டு, கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
தேசியப் பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/edu-mini-3-1024x768.jpg)
தொடர்ந்து, பாடசாலையின் தேவைகள் தொடர்பாக, அதிபர் ஆ.லோகேஸ்வரன் மற்றும் பிரதி அதிபருடன் கலந்துரையாடி, அதிபரிடம் இருந்து, பாடசாலை தேவைகள் தொடர்பான மகஜரை பெற்று, மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.
இதன் போது, வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் கலந்துகொண்டார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/edu-mini-7-1024x768.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/edu-mini-9.jpg)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2023/03/edu-mini-6-1024x768.jpg)