உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

0
279

தமிழ் மொழி மூலமான உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் முதற்கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சிங்களம் மற்றும் ஆங்கிள மொழிமூல பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் போதிய அளவில் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அந்த பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.