வேன்-லொறி விபத்து – 7 மாத குழந்தை உயிரிழப்பு !

0
129
தங்காலை கொடிகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தங்காலை பகுதியிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸ நோக்கி பயணித்த வேன்,  தங்காலை நோக்கி பயணித்த லொறி ஒன்றுடன்  மோதியதில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பேர்  பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.வேனில் பயணித்த ஐந்து பேரும் லொறியின் சாரதியும் காயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 7 மாத குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.ஆபத்தான நிலையில் உள்ள குழந்தையின் தாய் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இவ்விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.