மட்டக்களப்பு பூனொச்சிமுனையில் குறைந்த முதலீட்டில் நவீன மீன்பிடி முறைமைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்
இடம்பெற்றது.
தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலானது, அதன் தலைவர் பேராசிரியர். கலாநிதி ஏம்.எம்.எம். முஸ்தபா
தலைமையில் நடைபெற்றது.
பொருளாதார அபிவிருத்தி, உள்ளூர் மீனவர்கள் மற்றும் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் ஆய்வு ரீதியாக ஆராயப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திட்ட இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி. ஏ.எல். அப்துல் றவூப், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். யு.எல். நசிர்தீன், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம். கலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.