மதுபானசாலைக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0
148

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை நகரில் மதுபானசாலையொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பிற்பகல் மிஹிந்தலை சாஞ்சி ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் மிஹிந்தலை ஆலயம் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் கலந்துகொண்டனர். இதில் ரஜரட்ட பல்கலைக்கழக பதிவாளர் ஏ.பி.அபேசிங்க உள்ளிட்ட மாணவர்களும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தல விகாரையில் மதுபானக் கடையை நடத்துவதற்கு எவ்வகையிலும் இடமளிக்கப் போவதில்லை என இந்தப் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தல விகாரையில் இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபானக் கடைகள் பராமரிக்கப்படுமானால் அதற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து எதிர்காலத்தில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தல விகாரையின் விகாரையின் பணிப்பாளர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.