கிராமங்களில் உணவு உற்பத்தியை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் உதவி

0
102

உலக உணவுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச மக்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும் முகமாக தெரிவு செய்யப்பட்ட கமநல அமைப்புக்கள் மற்றும் பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன.


மண்முனை மேற்கு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு கமநல அமைப்புகளுடன் விவசாயம் சார்ந்த தொழிலினை மேற்கொள்ளும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கும் 8 நிலம் பண்படுத்தும் இயந்திரங்கள், 4 நிலக்கடலை பறிக்கும் இயந்திரங்கள், தேங்காய் எண்ணெய் பிளியும் இயந்திரம் மற்றும் நீர் குழாய்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளார் அப்துல் ரஹீம் சித்திக், ஜனாதிபதி செயலாக அபிவிருத்தி இணைப்பாளர் சுலக்சன் ஜெயவர்த்தன, பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், திட்டமிடல் பணிப்பாளர் பி. சசிகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.