அணு ஆயுத தடை தொடர்பில் புதிய ஒப்பந்தம்

0
86

அணு ஆயுத தடை பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, இம்மாதம் நியூயோர்க் நகரில் நடாத்தப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நடாத்தப்படவுள்ள நிகழ்வில் இலங்கை அணு ஆயுத தடை பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.