மட்டக்களப்பு காத்தான்குடியில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யு.பி.குணரட்னவின் வழிகாட்டலில் ‘போதைக்கு எதிரான இளைஞர் நாம்’ எனும் தொனிப் பொருளில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இளைஞர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வொன்று இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் ரஊப் ஏ.மஜீட் தலைமையில் நடைபெற்ற ஒன்று கூடலில்கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யு.பி.குணரட்ன கலந்து கொண்டார். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா ஷபீன்,சட்டத்தரணி ஏ.உவைஸ் உட்பட பலரும்பங்கேற்றனர். போதைவஸ்த்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் இடம் பெற்றன.