தசுனின் தலைமைத்துவத்திற்கு ஹர்சா போக்லே ஆதரவு

0
92

இலங்கை அணியின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவேண்டும் என தசுன்சானகவிற்கு  அழுத்தங்கள் கொடுக்கப்படாது என எதிர்பார்ப்பதாக என இந்தியாவின் கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்சா போக்லே தெரிவித்துள்ளார்.

அணித்தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவேண்டும் என தசுன்சானகவிற்கு அழுத்தம் கொடுக்கப்படாது என தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தசுன் சானக பதவிய இராஜினாமா செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கமாட்டார்கள் என நான் கருதுகின்றேன் அவர் ஒரு சிறந்த மனிதர் திறமையான தலைவர் என தெரிவித்துள்ள ஹர்சா போக்லே ஏனையவர்கள் போல அணித்தலைவர் விளையாடவில்லை என்றால் அது பிரச்சினையான விடயம்தான் எனவும் தெரிவித்துள்ளார்.