மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் கால்நடைகளை வளர்ப்போர் இன்று 6வது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

0
457

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரவைப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்கக் கோரி, கால்நடைப் பண்ணையாளர்கள்
இன்று 6வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் வருகைதந்து தமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்கினாலே தமது போராட்டம் நிறைவுபெறும்
என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ, ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜீவன் அடிகளார்,சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே,மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரே மேய்ச்சல் தரை பிரச்சினை விளங்கவில்லையா போன்ற வாசகங்கள்
அடங்கிய பதாகைளை போராட்டக்காரர்கள் இன்றும் தாங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.