கிரிக்கெட் நிறுவனத்தை அண்டிய வீதிகள் மூடல்

0
144

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை அண்டிய வித்யால மாவத்தை உட்பட்ட வீதிகள் இன்று காலைமுதல் மூடப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விவாதம் நடக்கவுள்ள நிலையில் மக்கள் போராட்டங்கள் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் இவ்வாறு வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேபோல பொலிஸாரும் ,இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.