இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் வசித்து வந்த சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டனின் தென்மேற்கில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் வசித்து வந்த சிமர்ஜித்சிங் நங்கபால் என்ற 17 வயது இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.குறித்த இளைஞனுக்கும் சிலருக்கும் இடையே வீதியில் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியதில் அக்கும்பல் இளைஞனைக் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த இளைஞனை காவல்துறையினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும் கிச்சை பலனின்றி சிமர்ஜித்சிங் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன் கொலையுடன் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.