அம்பாறை பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டட திறப்பு விழா இடம்பெற்றது.

0
139

அம்பாறை பனங்காடு பிரதேசவைத்தியசாலையில் பொதுமக்களின் நிதிப்பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் அரசநிதியில் நிர்மாணிக்கப்பட்ட மேல் மாடிக்கட்டட
திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.
பிரதமஅதிதியாக வைத்தியசாலைக்கு வருகைதந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு, வைத்தியர் குணாளினி சிவராஜ் தலைமையிலான வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலை அபிவிருத்திகுழுவினர், பொதுமக்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.
வைத்தியசாலையின் நுழைவாயிலை சிறுவர்களின் கரங்களினால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், கட்டடத்திற்கான பெயர்ப்பலகையினையும்
திரைநீக்கம் செய்தார்.
நிகழ்வில் ஆளுநர் பொதுமக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
வைத்தியசாலையின் ஆளணி உள்ளிட்டகுறைபாடுகள் விரைவில் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்பதாக ஆளுநர் உறுதிமொழி வழங்கினார்.
நிகழ்வில் கிழக்குமாகாணசுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், மாகாணசுகாதாரசேவைகள் பணிப்பாளர், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.