மட்டக்களப்பு காத்தான்குடியில் இலக்கியச் சரம் பல் சுவை கலை கலாசார இலக்கிய நிகழ்வு இன்று மாலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய மாணவர்கள், பிஸ்மி இடை நிலைப் பாடசாலை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் நாடகம், மாணவிகளின் ஹஸீதா,
வில்லுப்பாட்டு என பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் பாவலர் சாந்தி முகைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.எல்.எம்.சித்தீக் திறனாய்வு உரையை நிகழ்த்தினார்.