இலங்கை கிரிக்கெட் அணிக்கு மூன்று புதிய அணித்தலைவர்கள்

0
88

டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கட் அணிகளுக்கு மூன்று தலைவர்களை நியமிப்பது குறித்து இலங்கை தெரிவுக்குழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான குழுவினால் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 இதன்படி டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பு தனஞ்சய டி சில்வாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 தற்போது போட்டிகளை திமுத் கருணாரத்ன வழிநடத்தி வருகின்றார்.

 ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பை குசல் மெண்டிஸுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், T20 கிரிக்கெட் அணியின் தலைவராக வனிந்து ஹசரங்கவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக குசல் மெண்டிஸையும், ஒருநாள் மற்றும் டி20 துணைக் தலைவராக சரித் நயங்கவையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.