29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

செய்யாத குற்றத்திற்கு சிறைத் தண்டனை!!

அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் தான் செய்யாத குற்றத்திற்கு 48 வருடகால சிறைதண்டனை அனுபவித்த நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1975ம் ஆண்டு மதுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் என்ற இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் க்ளின் சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் தான் லூசியானா மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார். ஆனால், நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, பின்னர் மரண தண்டனை சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது.

22 வயதில் சிம்மன்ஸ் சிறை தண்டனை பெற்றார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தபோது, சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி தண்டனையை நீதிமன்றம் இரத்து செய்தது.

இதனையடுத்து, சிம்மன்ஸ் விடுதலையானார். க்ளின் சிம்மன்ஸ் அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலிலிருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில் (National Registry of Lxonerations) மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவராவார்.

அவர் கடந்த 2008ல் ஒரே ஒரு முறை பரோலில் வெளியே வந்தார். ஓக்லஹாமா மாநில குற்றவியல் சட்டத்தின்படி தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் ($1,75,000) வரை இழப்பீட்டு தொகை பெற முடியும்.

தற்போது கல்லீரல் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சிம்மன்ஸ் குற்றமே செய்யாமல் 48 வருட கால சிறைத் தண்டனை அனுபவித்ததை குறித்து சிம்மன்ஸ் கூறியதாவது,

பொறுமைக்கும் மன உறுதிக்கும் இது ஒரு பாடம். நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள். ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும் என தெரிவித்தார். 

மேலும், அவர் இழந்த இளமை பருவங்களை யார் தருவார்கள்? என சிம்மன்ஸ் விடுதலை குறித்து பலரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles