அம்பிளாந்துறை வீரமுனை பிரதேசத்திற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் களவிஜயத்தினை மேற்கொண்டார்.

0
107

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை வீரமுனை பிரதேசத்தில் வீதிக்கு குறுக்காக இரண்டு இடங்களில் நீர் ஓடுவதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் அதனூடாக பயணம் செய்யும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அப் பிரதேசத்திற்கான களவிஜயத்தினை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் மேற்கொண்டார்.
வெல்லாவெளி பாலத்திற்கு கீழ் ஆற்று வாழைகள் செறிந்து வளர்ந்துள்ளதனால் நீர் ஓட்டம் தடைப்பட்டு காணப்படுகின்றமையும், மண்டூர் பாலத்தின் வேலைகள் முடிவுறாத நிலையில் காணப்படுவது தொடர்பிலும் ஆராயாப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் பொதுச் செயலாளரினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனுக்கு அறிக்கைகளை சமர்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக ஆற்று வாழைகளை அகழ்வதற்கான நடவடிக்கைகளையும், மண்டூர் பாலத்தினூடாக தற்காலிக போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன், போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் கௌரிபாலன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப் பற்று பிரதேசக்குழு செயலாளர் பிரசாத், இணைப்பாளர் கருணைராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.