மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

0
126

————-மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், டெங்குக் கட்டுப்பாட்டுப்
பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 90 நாட்களுக்குள் ஏறாவூரில் 300 டெங்கு நோயளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சாபிறா
வசிம் தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பரிசோதகர்கள் வீடுகள் தோறும் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதோடு, புகை விசிறும் பணிகளும் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கிகள் மற்றும் நடமாடும் அறிவிப்பு வாகனங்கள் மூலமும் டெங்கு விழிப்புணர்வுத் தகவல்கள்
வழங்கப்படுகின்றன.
நோய்க்கட்டுப்பாட்டுபணிகளுக்காக உள்ளூராட்சிமன்றம், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.