மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.

0
115

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமையான தேவாலயங்களுள் ஒன்றான பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் வருடாந்த பெருவிழா
நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்திற்கு முன்பாக பார் வீதியில் உள்ள சின்ன லூர்த்து அன்னை ஆலயத்தில், செபமாலை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து அன்னையின்
திருச்சொரூபம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
ஆலயத்தின் பங்குத்தந்தை பிறைனர் செலர் தலைமையில் அருட்தந்தை அ.ஜேசுதாசன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த திருச்சொரூப பவனி
நடைபெற்றது.
ஆலயத்தினை திருச்சொரூபம் வந்தடைந்ததும் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தடியில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து
கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 10ஆம் திகதி மாலை ஆலயத்தின் திருச்சொரூப பவணி நடைபெறவுள்ளதுடன் 11ஆம் திகதி காலை மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா
ஜோசப் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொடியிறக்கத்துடன்
பெருவிழா நிறைவுபெறும்.