மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலாளராக திருமதி கௌரி தினேஸ் நியமனம்

0
73

மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தின், புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி கௌரி தினேஸூற்கு,
காங்கேயனோடை அனைத்து பள்ளி வாயல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வரவேற்பளிக்கப்பட்டது.
காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில், சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளரும் காங்கேயனோடை பிரதேச முக்கியஸ்தருமான
அஸ்லம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் காங்கேயனோடை அனைத்து பள்ளி வாயல்களின் தலைவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்