மருந்து கொள்வனவு, விநியோகம் தொடர்பான விசேட கணக்காய்வு நிறைவு

0
91
2022 – 2023 ஆம் ஆண்டுகளுக்கான மருந்து கொள்வனவு மற்றும் விநியோகம் தொடர்பான விசேட கணக்காய்வு முடிவடைந்துள்ளது.இது தொடர்பில் பதிலளிக்க சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் சுகாதார அமைச்சிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.இதற்கமைய, குறித்த அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.