27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த தமிழன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவின் இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்று சமனிலையில் உள்ளன.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று ஆரம்பமாகியது.நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 445 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில், ரோகித் சர்மா 131 ஓட்டங்களும் , ஜடேஜா 112 ஓட்டங்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்சை தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியதுடன் டெஸ்ட் போட்டிகளில் அவரது 500வது விக்கெட் பதிவானது.இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் மொத்தம் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதுடன் இந்தியா தரப்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles