2024ம் ஆண்டுக்குரிய கல்வியாண்டிற்கு, தரம் ஒன்றுக்கான புதுமுக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா இன்று
கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளிலும் கோலாகலமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியலாயத்தில் வித்தியாலய அதிபர் வை.பிரபாகரன்
தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
தரம் 2 மாணவர்கள், புதுமுக மாணவர்களை வரவேற்றனர்.
மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில், புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, வித்தியாலய அதிபர்
அருமைத்துரை தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வில், புதுமுக மாணவர்களை, தரம் 2 மாணவர்கள் இன்முகத்துடன்
வரவேற்றனர்.
மட்டக்களப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஹரிகரராஜ் உட்டப மதத் தலைவர்கள், பெறங்றோர்கள் என பலரும்
கலந்துகொண்டனர்.
புதிய மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.

விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி ஹிஸ்புல்லா வித்தியாலயத்தில்
தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சிரேஸ்ட ஆசிரியர் அப்துல் நாஸரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்விற்கு, பிரதம அதிதியாக இப் பாடசாலையின்
முதலாவது அதிபர் கே.காலிதீன் பிரதம அதிதியாகக் கலற்துகொண்டார்.
மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.

அம்பாறை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட் சகோதரர் எஸ்.ஈ. ரெஜினாட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி பிரதிப்பணிப்பாளர் எம்.எச்.எம்.வாஹிர் கலந்து கொண்டார்
புதுமுக மாணவர்க்ள மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு, இன்று,
கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் காத்திருப்போர் கூடமும்
திறந்து வைக்கப்பட்டது.

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் திருமதி என்சஞ்சீவ் தலைமையில் இடம் பெற்ற
தரம் 1க்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சஞ்ஜீவன்
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்திற்கு ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு இன்று
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம் எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
ஃபோரம்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்றது.
வித்தியாலய அதிபர் யஸீர் அரபாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளர்களான எஸ்.எச்.அஸ்பர்
மற்றும் மர்சூக் அகமது லெவ்வை, காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ரவூப் ஏ.மஜீத் உட்பட கல்வி அதிகாரிகள்
என பலரும் கலந்து கொண்டனர்
உள்ளக விளையாட்டரங்கு திறந்து வைக்கப்பட்டு நினைவுக்குக் கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்டது.
பாடசாலையில் தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்ட புதிய மாணவர்களும் இன்றைய நிகழ்வில் மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு பண்டங்கள்
வழங்கி வரவேற்கப்பட்டனர்.
