இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் : உண்ணாவிரதப் போராட்டத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள்

0
115

இலங்கை கடற்பரப்பில் எல்லைமீறி மீன்பிடித்த நிலையில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், மீனவ தொழிலாளர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கச்சிமடம் பகுதியில் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று பத்தாவது நாளாக இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.