அரச சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட செயலற்ற தொலைபேசி இலக்கங்கள்

0
97

நாட்டில் அரச சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தொலைபேசி இலக்கங்களில் அரைவாசி செயலற்றதாகவும், தொடர்பு கொள்ள முடியாததாகவும் உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிராந்திய செயலகத்தின் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கி நாடு பூராகவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


அதன்படி, மொத்தம் 589 தொலைபேசி இலக்கங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், அவற்றில் 286 செயலிழந்து இருப்பது கண்டறியப்பட்டது.


இதற்கிடையில், 22 சதவீத தொலைபேசி எண்கள் செயலில் உள்ளன, ஆனால் பதிலளிக்கவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 29 சதவீத அழைப்புகளுக்கு பதிலளித்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.